RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
CalendarCalendar

Share | 
 

 என் உயிரே நீ தானடா

View previous topic View next topic Go down 
AuthorMessage
Jaya

avatar

Posts : 150
Join date : 2013-07-08

PostSubject: என் உயிரே நீ தானடா   Thu Oct 03, 2013 8:02 pm

.



என் உயிரே நீ தானடா




என் செல்லமும் நீ

என் செல்வமும் நீ

ஏன்

என் உயிரே நீ தானடா

புரியவில்லை கண்ணா உனக்கு



சரி சரி முதல்ல சாப்பிடு

மதியமும் சாப்பிடவில்லை

கண்ணா

நீ

இப்படி கேட்பதெல்லாம்

மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது

என் மகன் வளர்ந்துவிட்டான்

என்னையே கேள்வி கேட்குமளவுக்கு



எங்கே போகின்றேனா?

பணம் தேடவடா கண்ணா

பணம் தேட



பணம்

உலகின் திறக்காத கதவுகளையும்

திறக்கும் மந்திரக்கோல் கண்ணா

மந்திரக்கோல்



பணம்

உறவுகள் கொண்டாடும்

உரிமையை தீர்மானிப்பது



பணம்

நாம் போகும் இடங்களில்

நம்மைபற்றி கட்டியம் கூறுவது



பணம்

மருந்து எழுதும்

கடதாசியில் மையாவது



எம்மை சமூகத்திற்கு

எடுத்தியம்பும் முத்திரை

கண்ணா பணம்

அதனை தேடிதான் போகின்றேனடா





பார்ப்பது புரிகின்றது

அப்பா தேடுவது காணும்தானே

நீ எதற்கு போகின்றாய் ?



நீ

என்ன நினைக்கின்றாய்

உலகில் விலைவாசி

ஏறிக்கொண்டே இருக்கின்றது

இருவரும் உழைத்தே

மாதத்தின் நடுவிலேயே

தந்தான போடுகின்றோம்

இன்றைய விலைவாசியில்

ஓருவர் உழைப்பில்

உனக்கு மட்டுமே சாப்பாடு

போடலாமா தெரியாது

புரிந்து கொள் கண்ணா



உனக்கென்னடா தெரியும்

நான் படும்பாடு

உன்னை இங்கு விட்டுவிட்டு

என் உயிர்

அங்கும் இங்குமாய்

அலைகின்றதடா கண்ணா

அலைகின்றது



பகல் முழுவதும்

நீ சாப்பிட்டாயா?

தூங்கினாயா?

ஆயிரம் கேள்விகளை

நானே கேட்டு என்னையே

துளைத்துக்கொண்டு இருப்பேன் கண்ணா



அடக்கமாட்டாமல் பேசியில்

அப்பத்தாவிடம் கேட்டால்

”யாரடீ இவ ஐந்து பிள்ளை பெற்று

வளர்த்த எனக்கு பிள்ளை

வளர்க்கத்தெரியாதா? ஊரில

இல்லாத பொல்லாத பிள்ளை”

என்ற பேச்செல்லாம் தாண்டி

உன்னை கேட்டால்

”அவன் சாப்பிடவில்லை

படுத்திட்டான் நீ தான் வந்து பார்”

என்று பதில் வரும்



சாப்பாட்டில் கைவைத்த நான்

கைக்குட்டையில் கை வைப்பெனடா

உடனே பறந்து வந்து

உன்னை அள்ளி அணைக்க

வேண்டும் போல் இருக்குமடா

ஆனால் என்ன செய்ய

அன்றைய பொழுதை

புன்னகை என்னும் அரிதாரம் பூசி

அலுவலகத்தில் வேலைமுடித்து

ஓடிவந்து உன்னை அணைக்கும்வரை

ஓயாதடா என் மன ஓலம்



அம்மா அம்மா

என்றவண்ணம் ஆரத்தழுவி

முத்தமிட்டான் அன்பு மகன்



என் செல்லமே

என் தங்கமே என்று

ஆரத்தழுவினாள் அந்த அன்னை



அந்த கணத்தில் இருந்து

இரு உள்ளங்களும்

ஓன்றை ஓன்று புரிந்து கொண்டன












Back to top Go down
View user profile
 
என் உயிரே நீ தானடா
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: