RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
June 2018
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
CalendarCalendar

Share | 
 

 இவளும் ஓர் திரௌபதி.....

Go down 
AuthorMessage
Jaya

avatar

Posts : 150
Join date : 2013-07-08

PostSubject: இவளும் ஓர் திரௌபதி.....   Fri Aug 09, 2013 2:28 pm

.



இவளும் ஓர் திரௌபதி.....




மை பூசிய கண்கள்

பொய் பேசும் இதழ்கள்

இதயத்தில் கசியும் இரத்தம்

இதழ்களில் சாயமாக

சிக்கென்ற சிறு இடை

சேலை என்று பெயர்

கழுத்திலோ தாலியில்லை

கண்களோ மஞ்சத்திற்கு வருபவரை

எதிர் பார்த்து...



பட்டில் மஞ்சம்

பக்கமாய் பெண்

மஞ்சதிலும்

மங்கையிலும்

மல்லிகை வாசம்



பெண்மையின்

மனதில் செலவு கணக்குகள்

இன்றைய வரவு எவ்வளவாக

இருக்கும் ஏக்கமாய்

எத்தனையாய்

இருக்கும் விரக்தியாய்



குடும்ப பாரத்தை

கொண்டிழுக்கும்

கழுதை

இவள்

கொடுப்பதை வாங்கிவிட்டு

கொடுத்துவிடுவாள் கௌரவத்தை

கட்டில் பாடத்தில்

இவள்

கரை கடந்த

கலை மாமணி...



மெய்யின் தேவையாலும்

மேனி பல காண்பவராலும்

நெய்விட்ட விளக்காய்

நீண்டு செல்கின்றது

இவள்

வாழ்க்கை



இறைவா..

மெய்தனை அழகாய் கொடுத்துவிட்டாய்

இல்லையேல்

மெய்யாக பொருளீட்ட மூலதனம் ஏது

இவளிடம்



இவள்

சாபம் பெற்ற

தேவதை

பகலில்

இவள் பேரழகு கன்னி

இரவில்

இவள் பலபேர் அணைக்கும் கன்னி



இவளும்

ஓர்

திரௌபதி

வித்தியாசம் என்னவெனில்

திரௌபதிக்கு

பாண்டவர் ஐவர்

இவளுக்கு

எண்ணற்ற கௌரவர்கள்

கௌரவத்தை தொலைத்தவர்கள்



இவளும்

கன்னியானவுடன்

கனவுகளுடன்

வாழ்ந்திருப்பாள்

எங்கே?

எப்படி?

பிழை நேர்ந்ததோ...

இன்று

கைதேர்ந்த சதை

வியாபாரி



இவள்

பெயர் சொன்னால்

திறக்காத கதவுகளும்

திறக்கும்

அவ்வளவு பெருமையும்

அவளுக்கல்ல

அவள் கட்டழகிற்கு



சதைப்பிண்டங்களின்

பெருமூச்சுக்களை

சகித்துக்கொள்ளும்

புண்ணியவதி

இவர்கள்

இல்லையேனில்

இவ்வுலகு

நாறியிருக்கும்



நாலுபேர் நடுவினில்

நன்றாக நடித்திருப்பாள்

தனிமை கிடைத்துவிட்டாள்

தன்னையே நொந்துகொள்வாள்

தனிமை கிடைத்திடுமா என்ன?



சிலவேளைகளில்

வீட்டின் மேல்தளத்திலிருந்து

பக்கத்து வீட்டை

வெறித்திருப்பாள்



என்னதான் பார்க்கின்றாள்



சின்ன குழந்தை ஒன்றை

தந்தையவன் தூக்கி கொள்ள

தாயவள் உணவூட்டுகின்றாள்



இந்த காட்சி

இவள் வாழ்க்கையில்

இல்லையல்லவா..



”அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்”

செல்போன் சிணுங்க

கண்களை எடுக்காமல்

காதருகில் வைக்கின்றாள்



யார்?

ஓ...

ஓம் ஓம்...

நான் தான் கதைக்கின்றது

எப்ப ?

எங்க?

செலவாகும்

சரி சரி

வாகனம் அனுப்புங்கோ



செல்ல சிணுங்கலுடன்

பொய்யான ஒர் புன்னகை

இதழ்களில் தவழவிட்டு

கண்களை காட்சியில் இருந்து

வெட்டி யெடுத்து

மனதை வென்றிடும்

துணிவோடு

புறப்பட்டாள்

பெரும் புள்ளியை

பார்ப்பதற்கு............








Back to top Go down
View user profile
 
இவளும் ஓர் திரௌபதி.....
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: