RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
January 2018
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
CalendarCalendar

Share | 
 

  ராதை சொன்ன கீதை

View previous topic View next topic Go down 
AuthorMessage
Jaya

avatar

Posts : 150
Join date : 2013-07-08

PostSubject: ராதை சொன்ன கீதை   Tue Aug 06, 2013 2:19 pm

.



ராதை சொன்ன கீதை




கண்ணன் செவியில் ராதை சொன்னாள் கீதை ஒன்று – அவன்

கண்கள் என்றும் காதலுடன் தன்னிடமே நிலைப்பதற்கென்று

கீதை சொல்ல வந்த கண்ணன் கிள்ளை மொழி கேட்டான் –அவள்

கீதை கேட்டு கண்ணனவன் கிளர்ச்சி மிக அடைந்தான்

விண்ணளந்த மன்னன் அவன் வீழ்ந்துவிட்டான் – காதல் சொல்லும்

விழியழகில் மயங்கியவன் மருண்டுவிட்டான்

சொன்ன ஒர் சொல்லிலே செயல்கள் மறந்தான்

சொர்க்கம் அவள் முகத்தினிலே என்று சொல்லித்திரிந்தான்.


வேணுகானம் இசைக்கையிலே ராதை வந்தாள்

வேணுகோபன் இசையினிலே தன்னை மறந்தாள் - கண்ணன்

விழியது திறந்துவிட்டால் விரைந்து மறைந்தாள்– காதலினால்

விண்ணவனும் மண்ணில் வந்து வேதனையுற்றான்

கையதனை தொட்டிழுத்தால் நெஞ்சில் வீழ்ந்தாள்

கம்பன் சொல்லா கவியழகில் அவளை காண மூச்சையுற்றான்

கனவினிலே வந்த ராதை எங்கு சென்றாள்

காணவில்லை காணவில்லை என்று ஓடித்திரிந்தான்


கண்ணன் அவன் லீலையிலே உலகம் மயங்க

கள்ளனவன் அவள் நினைவில் உலகை மறந்தான்

ராதையவளை பார்த்து விட்டாள் தன்னை இழந்தான்

ரகசியங்கள் கண்ணால் பேசி அவளை தொடர்தான்

அன்பு என்னும் தளை கொண்டு அவனைக்கட்டி-ராதை

அகிலம் வேண்டும் இறைவனையே தன்னுள் சுமந்தாள்

இனிய நல்காதலிலே இறைவன் திளைத்தான்

இருவிழியுள் அவள் அழகை அள்ளி நிறைத்தான்


கண்ணா கண்ணா என்று உலகம் ஜெபிக்க- அவனோ

ராதா ராதா என்று உயிருள் ஜெபித்தான்

கண்ணன் அவன் விழியசைவில் கோபியர்கள் ஏங்க

கள்ளனவன் விழியினுள்ளே ராதை வாழ்ந்தாள்

ராதை வேறு கண்ணன் வேறு என்று இல்லை

ராதா கிருஸ்ணனாக கண்ணனுள்ளே நிறைந்துவிட்டாள்

கண்ணன் சொன்ன கீதையிலே உலகம் நடக்க

ராதை சொன்ன கீதையிலே கண்ணன் நடந்தான்



ராதா கண்ணன் பற்றிய தகவல்கள்.......








Back to top Go down
View user profile
 
ராதை சொன்ன கீதை
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: