RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
May 2018
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
CalendarCalendar

Share | 
 

 காதலர்களை கவர்வது எப்படி?

Go down 
AuthorMessage
Tamilkings

avatar

Posts : 16
Join date : 2012-03-04
Age : 29
Location : India

PostSubject: காதலர்களை கவர்வது எப்படி?   Thu Mar 08, 2012 12:48 am

உங்கள் காதலன்/காதலி மற்றும் அவர்களை சுற்றியுள்ள நபர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டால் காதல் கனியும் என்று ஆலோசனை தருகிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனிமனித இயல்புகள் மற்றும் சமூக உளவியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் பெண் கிறிஸ்டன் கபாசோ.

இவர் காதலர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் அவர்களது காதலை வளர்க்கிறதா? எந்தளவு வளர்க்கிறது? என்று சமீபத்தில் ஆய்வு நடத்தினார்.

120 காதல் ஜோடிகளிடம் ஓன்லைனில் கருத்துக்கணிப்பு நடத்தினார். அதன் அடிப்படையில் காதல் கனிவதற்கு அவர் கொடுக்கும் அறிவுரை இதுதான்: நாய் போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

செல்லப் பிராணி வளர்க்கும் ஆண்கள், தன் காதலியும் அந்த பிராணியை நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. இது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று விட்டுவிடுகின்றனர்.

ஆனால் பெண்கள் அப்படியல்ல. நான் வளர்க்கும் நாயை என் காதலனும் கண்டிப்பாக நேசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே உங்கள் காதலி நாய் வளர்த்தால், அதை நேசியுங்கள் அல்லது நேசிப்பது போல நடிக்கவாவது செய்யுங்கள்.

இன்னொரு முக்கிய விடயம். காதலன் தன் மீது மட்டுமே அன்பு செலுத்த வேண்டும் என்று பெண் விரும்புவாள். இது பெண்களின் பொது இயல்பு.

காதலன் வளர்க்கும் நாயைக்கூட தனக்கு போட்டியாகத்தான் கருதுவாள். எனவே காதலி பார்க்கும் நேரத்தில் நாயுடன் சுற்றுவதை, நாயை கட்டிக்கொள்வதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள் என்கிறார் கிறிஸ்டன்.
Back to top Go down
View user profile http://www.tamilfirez.blogspot.com
 
காதலர்களை கவர்வது எப்படி?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: NEWS-
Jump to: